வரலாற்றில் இடம் பிடித்த சரவணபவன் ராஜகோபால் வழக்கு..! தெரியுமா இந்த விஷயம்..! 

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலம் மட்டுமல்லாது மாநில மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியிடப்படும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பிறப்பித்த 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்புக்களை அந்தந்த மாநில அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இதில் தமிழ் மொழியும் ஒன்று. 

அந்த வகையில் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தான் தமிழில் முதன் முறையாக மொழி மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் தீர்ப்புகளை நிறைவேற்றுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆங்கில பதிப்பே அதிகாரபூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இதன் மூலம் முதன் முதலில், உச்ச நீதி மன்ற தீர்ப்பை தமிழில் மொழி பெயர்த்த வழக்கு என்றால் அது சரவணபவன் ராஜகோபால் வழக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.