தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யாத இடங்களில் அனல் காற்று வீசும் என்றும், திருச்சி சேலம் நாமக்கல் திருப்பூர் ஈரோடு திண்டுக்கல் நீலகிரி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் அதிகபட்சமாக சூளகிரியில் 6 சென்டிமீட்டர் கொடநாடு 4 சென்டிமீட்டர், நத்தம் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.