தமிழகத்தில் மழை குறித்து முக்கிய தகவல்..! 

தமிழகம் மற்றும் புதுவையில் சில தினங்களுக்கு மழை குறைய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக நல்ல மழை கிடைத்தது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் வட மேற்கு வங்க கடலில் மேற்கு வங்க மாநிலம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஒடிசா நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், வரும் 31ம் தேதியன்று மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. இதனால் தமிழகத்தில் வீசும் காற்று திசை மாறி விடும்.

தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்  தெற்கில் இருந்து காற்று வீசும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு மழை குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில்  6 சென்டி மீட்டர் மழையும், பவானி நடுவட்டம் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.