இன்று வரப்போகிறது மழை...!  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு கர்நாடகம் முதல் குமரி கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக தென்காசியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்த வரையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது அவ்வப்போது சுட்டெரிக்கும் வெயிலும் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கோடை வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள எப்போதும் தன் கையில் ஒரு குடை மற்றும் வாட்டர் பாட்டில் வைத்திருப்பது நல்லது