இன்று தமிழகத்தில் கனமழை..! 

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை அக்னி வெயில் இருப்பதால் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது. இதனிடையே பலத்த அனல் காற்று வீசுகிறது. பொதுமக்கள் அதிக வெப்பத்தின் காரணமாக வெளியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. பழச்சாற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் எங்கு சென்றாலும் தன்னுடன் குடை வைத்துக் கொள்வது சிறந்தது. கோடை வெயிலுக்கு ஏற்றவாறு ஆடையை அணிவது நல்லது. வெளியில் செல்லும்போது இளநீர் தர்பூசணி உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.