ஜூம் 6 ஆம் தேதி தொடங்குகிறது பருவமழை..! இப்போதே குஷியான  மக்கள்..! 

வரும் ஜூன் 6ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கான சூழல் தற்போது அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ளது என்றும், இதனை பொறுத்து கணக்கிட்டால் மே 19 மற்றும் 20ம் தேதி ஆகிய நாட்களில் தென்கிழக்கு வங்கக்கடலில் இதற்கான சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருந்தபோதிலும் சென்னையை பொருத்தவரையில் வெப்பநிலை சற்று அதிகமாக உள்ளது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மழை பெய்யும் மாவட்டங்களை தவிர இதர பல மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளதால் தமிழகத்திற்கும் புதுவைக்கும் ஓரளவிற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.