தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் காற்றானது இமயமலை வரை சென்று அதனுடைய வலு குறைந்து உள்ளது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும்.

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய மேலும் ஒரு வாரம் இருக்கும் பட்சத்தில்  இதற்கிடையில், இருக்கக்கூடிய காலகட்டத்தில் தமிழகத்தில் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நேற்று காலை எட்டு முப்பது மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் திருப்பத்தூரில் 4 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் கரூரில் 102 டிகிரி, திருத்தணியில் 107 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது