கனமழை எச்சரிக்கை..! இந்த 6 மாவட்ட மக்களும் உஷார்..! 

நீலகிரி கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், திண்டுக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் நீலகிரி கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், ஓசூரில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 5 சென்டி மீட்டர் மழையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை இரவு நேரத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.