தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை..! 

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 35லிருந்து 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும், அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இயல்பைவிட 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

வெப்பநிலை 

கரூர் திருச்சி பெரம்பலூர் சேலம் திருவண்ணாமலை வேலூர் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஏற்காடு சேலம் உள்ளிட்ட இடங்களில் 7  சென்டி மீட்டர் மழையும், திருத்தணியில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.