தமிழகத்தில் இடியுடன் ஜோன்னு மழை..! சந்தோஷமா மக்களே...!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்படி தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை தேனி சேலம் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்போது.. குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும், மழை வரும் இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அனல் காற்று வீச அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் திருப்பத்தூர் ஏற்காட்டில் தலா 2 செ.மீ மழையும், வால்பாறை - 1 cm மழையும் பதிவாகி உள்ளது.