தமிழகத்தில் மழைக்கான அறிவிப்பு..! 

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதற்கிடையில் வெப்ப சலனம் காரணமாக மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை அல்லது ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே அக்னிநட்சத்திர அனல் காற்றில் இருந்து தப்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

அதேவேளையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், சென்னையில் லேசான மழை கூட இல்லாதது சென்னை மக்களை ஒருவிதத்தில் வாட்டி வதைக்கிறது என்றே சொல்லலாம்.

அதே நேரத்தில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னையை பொருத்தவரையில் மழை என்பது பகல் கனவாகவே இருக்கிறது என்பதால் சென்னை மக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.