மழை தொடங்கி விட்டது மக்களே..! இந்த பகுதியில் சும்மா ஜில்லுன்னு இருக்காம் இப்போ...!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலம் முதல் குமரி கடல் மேல் பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஆங்காங்கு மிதமான மழை பெய்து வருகிறது. உதாரணமாக கொடைக்கானல், தர்மபுரி கன்னியாகுமரி, உதகை தற்போது பழனி போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழனி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும் பல நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் காணப்படுகிறது. கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் எப்போது வெளியில் சென்றாலும் தன்னுடன் ஒரு பாட்டில் தண்ணீர் மற்றும் ஒரு குடை வைத்துக்கொள்வது மிகவும் சிறந்த ஒன்று.

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்போதும் நம் கையில் ஒரு குடை வைத்துக் கொள்வது நல்லது.