கோடை காலம் தொடங்கி சுட்டெரித்து வரும் வயலுக்கு நடுவே தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்றுமுன்தினம் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று முன் தினம் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு நீலகிரியில் மழை பெய்து உள்ளது. இன்று திண்டுக்கல் கொடைக்கானல் நகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடனும் சில நேரங்களில் லேசான வெயிலும் காணப்படுகிறது

ஆனாலும் இந்த ஆண்டு இயல்பைவிட மூன்று முதல் ஐந்து டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது