மிக மிக கனமழைக்கான எச்சரிக்கை..! எங்கெல்லாம் பயங்கர மழை வரும் தெரியுமா..? 

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்து உள்ளதால் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். 

இதன் காரணமாக நீலகிரி, கோவை, மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 41 சென்டி மீட்டரும், அப்பர்பவானியில் 22 சென்டி மீட்டரும், நடுவட்டம் 12 சென்டிமீட்டர், சின்னக்கல்லார் தேவாலா வால்பாறையில் 11சென்டிமீட்டர், நீலகிரி மாவட்டம் ஜி பஜார் 10 செ.மீ  மழையும் பதிவாகி உள்ளது. 

மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.