தமிழகத்தில் பயங்கர மழை பெய்ய உள்ள இடங்கள்..! 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி 5 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் காங்கேயத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இது தவிர தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பொய்கை, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பல வாழைத் தோட்டங்கள் பெருமளவு சேதம் அடைந்து உள்ளன.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்றும் மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.