தமிழகத்தில் கனமழை...! அதுவும் இந்த 10 மாவட்டத்தில் மிக கனமழை பெய்யுமாம்..! 

தமிழகத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இதன் காரணமாக திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை வேலூர் கோவை தேனி திண்டுக்கல் நீலகிரி உள்ளிட்ட10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு அல்லது மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு பார்த்தால் தென்மேற்கு பருவமழை சென்ற ஆண்டு பெய்ததை விட இந்த ஆண்டு 31 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.