2 நாட்களுக்கு மழையாம்...சந்தோஷப்படுங்க..! வானிலை அறிவிப்பு..!

குடிக்க  குடிநீர் கூட இல்லாமல் தமிழகத்தில் மக்கள் படும் பாடு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பெரும்  அவதிபட்டு வரும் மக்கள் தற்போது குடிநீருக்காகவும் அங்கும் இங்கும் அலைந்து வருகின்றனர். 

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வரலாறு காணாத அளவிற்கு தட்டுப்பாடு  ஏற்பட்டு உள்ளது என புள்ளிவிவரமும் தெரிவிக்கிறது. குறிப்பாக சென்னையில் அதிக தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஓ.எம்.ஆர்  சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும்  மேன்ஷன்கள் என அனைத்தும் முடங்கி உள்ளது. அது மட்டுமா..? ஒரு சில பள்ளிகள் கூட தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, அரை நாள் இயக்கி விட்டு  விடுமுறை அறிவித்தது.  இதையும் தாண்டி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கழிப்பறை  மூடப்பட்டு உள்ளதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையில், 200 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி, போரூர், காட்டுப்பாக்கம், ஐயப்ப தாங்கல், மந்தைவெளி என பல்வேறு இடங்களில் ஓரளவிற்கு மழை  பெய்துள்ளது.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் லேசான மழை இருக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் தமிழகத்தில், படிப்படியாக வெயில் குறைய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

.