ரயில்வேயில்1 லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்கள்...! 

நம்ம என்னதான் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் அரசு வேலை வாங்குவதில் உள்ள ஆர்வம்  நம்ம மக்களுக்கு தனி  கவனம் உண்டு அல்லவா..? 

அதுவும் மத்திய அரசு வேலை என்றால்..? குறிப்பாக ரயில்வேயில் வேலை என்றால், யாருக்கு தான் ஆர்வம் இருக்காது உடனடியாக விண்ணப்பக்க..? அதற்கான நேரம் வந்தாச்சு...உடனே விண்ணப்பியுங்க...

இந்திய ரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இந்த பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரிவு அல்லாத 30,000 பணியிடங்களுக்கும், பாரா மெடிக்கல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்களுக்கும் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களுக்கு www.rrbchennai.gov.in என்ற அரசு  இணையதள பக்கத்திற்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். ஏசியா நெட் நியூஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.