டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் 35,227 காலி பணியிடங்கள் உள்ளது என ரயில்வே துறை அறிவித்து உள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நாள்: மார்ச் 1 முதல் 31 மார்ச் 2019 வரை 

தேர்வு  கட்டணம் செலுத்த கடைசி நாள் 5 ஏப்ரல் 2019. இதற்கான கணினி வழித்தேர்வு ஜூன் முதல் செப்டம்பர் 2019. இந்த பணிக்காக விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயதுவரம்பு 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 33 

சம்பளம் : 19 ,900 முதல் ரூ.35,400 வரை கிடைக்கும்

பொது பிரிவினருக்கு தேர்வுக்கு கட்டணம் : ரூ.500  

மற்ற பிரிவினருக்கு ரூ. 250 என்றும் நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது.

கல்வித்தகுதி : ஏதாவது இளங்கலை பட்டம் பெற்று இருந்தால் போதும்.

ஆன்லைன் விண்ணப்பம் : இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.rrbchennai.gov.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, டைப்பிங்  திறமையை பொறுத்து தேர்வு செய்யப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.