மோடியை தனக்கு மிகவும் பிடிக்கும் என ராகுல் காந்தி ம்,மாணவர்களுடனான உரையாடலின் நடுவே தெரிவித்து உள்ளார். 

மோடியை தனக்கு மிகவும் பிடிக்கும் என ராகுல் காந்தி ம்,மாணவர்களுடனான உரையாடலின் நடுவே தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, நான் சிறுவயதில் இருந்தே பல வன்முறை சம்பவங்களை பார்த்து இருக்கிறேன். வன்முறையால் எதையுமே சாதிக்க முடியாது என்பது தான் உண்மை.. பாஜக வேண்டுமென்றால் என்னை வெறுக்கலாம் ஆனால் பாஜக மீது தனக்கு வெறுப்பே கிடையாது என குறிப்பிட்டுள்ளார் ராகுல். அதேவேளையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மோசமான நடவடிக்கை என்றும் அதனால் மக்கள் பெரிதளவு பாதித்துள்ளனர் என்பதை பொருளாதார நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் 60 வயதிற்கு மேல் ஓய்வு பெறவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடியை மட்டுமின்றி மற்ற எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்களையும் பொடிவைத்து பேசியுள்ளார். இதற்கு முன்னதாக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படும் என்ற கருத்துக்கு மக்கள் மத்தியில் அவருடைய வயதையும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

அதன்படி ராகுல் சிறிய வயதுடையவர் என்றும் அரசியலில் சாதிக்க இன்னும் கொஞ்சம் அனுபவமும் அரசியலும் தெரிந்திருக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 60 வயதிற்கு மேல் அரசியல்வாதிகள் ஓய்வு பெற வேண்டும் என ராகுல் தெரிவித்திருப்பது முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது.