சரியாக 2.02 கு ராகு கேது பெயர்ச்சி..! 

இன்று ராகு கேது பயற்சி நடைபெறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் ? ஓரளவிற்கு பலன் அடைய கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதையும். பரிகாரம் செய்ய கூடிய ராசிக்காரர்கள்   யார் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

நிழல் கிரங்களான ராகு மற்றும் கேதுவிற்கு உருவம் கிடையாது. வலமிருந்து இடமாக சுற்றக்கூடிய ராகு மற்றும் கேது இவர்கள் ஒரு  ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதன் படி, தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசுவிற்கும் இடம் பெயர்கிறது.இன்று பகல் சரியாக 2 .02 -கு இடம் பெயர்கிறது. இதனையொட்டி ஈஸ்வரன் கோவில்களில் உள்ள ராகு கேது தளத்திற்கு சென்று இன்று மக்கள் வழிபடுதலில் ஈடுபட்டு உள்ளனர்.

ராகு பெயர்ச்சி 

நல்ல பலன் பெரும் ராசிகள் : மேஷம் சிம்மம் மகரம், 
சுமார் : கன்னி துலாம், தனுசு,கும்பம் 
பரிகாரம்: ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சகம், மீனம்
 
இதே போன்று கேது இடமாற்றத்தால் நல்ல பலன் கிடைக்க கூடிய ராசியினர்: கடகம், துலாம், கும்பம்
சுமார் : மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்
பரிகாரம் : ரிஷபம், கன்னி, விருச்சகம், தனுசு, மகரம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர்,பரிகாரம் செய்துகொள்வது நல்லது.