ராதிகா சரத்குமார் எப்படி டப்பிங் வாய்ஸ் கொடுக்குறாங்க பாருங்க....! 

மணிரத்தினம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் அடுத்து வரவுள்ள படம் வானம் கொட்டட்டும்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து முடிந்துள்ளது. தனசேகர் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் அர்ஜித் சிங் விஜய் பிரகாஷ் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டப்பிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய காட்சிக்கு டப்பிங் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார் ராதிகா சரத்குமார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக......

மிகவும் பிசியாக வலம்  வரும் ராதிகா சரத்குமார் கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ காட்சியில் மிக அழகாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறார். 

நடிப்பில் பின்னி பெடெலெடுக்கும் ராதிகா, தொகுத்து வழங்க உள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சி குறித்த ஆவல் மக்கள் மத்தியில் இப்போதே கிளம்பி உள்ளது