இடி மழை மின்னல் எதையும் பொருட்படுத்தாத பெண் ஊழியர்...! குப்பையை அகற்றுவதிலேயே குறி....குவியும் தொடர் பாராட்டு...!   

தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மேலும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை இரவு முழுக்க பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய மழை பெய்தாலும் இடியே இடித்தாலும் தன்னுடைய பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்ப துப்புறவு பணியாளரான ஒரு பெண்மணி கடும் மழை என்றும் பாராமல் தன்னுடைய வேலையில் மும்முரமாக இருக்கிறார்.

கீழே உள்ள ஓர் பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொண்டு மற்றொரு கையில் கொஞ்சம் குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார். இந்த ஒரு காட்சி காட்சியை சமூக ஆர்வலர் ஒருவர் போட்டோ எடுத்து பதிவிட இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த பெண்மணிக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.