சென்னை விமான நிலையத்தில் "5 சினிமா தியேட்டர்"...! பிளைட் வர நேரத்திற்குள் படம் பார்க்கலாம்..! 

விமான நிலையத்தில் பயணிகள் நேரத்தை ஜாலியாக கழிக்க 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் பணியில் இறங்கி உள்ளது பிரபல தனியார் நிறுவனமான பி.வி.ஆர் நிறுவனம். 

அப்போது இந்த நிறுவனத்திற்கு மட்டும் 50 நகரங்களில் 584 திரைகளை கொண்டுள்ளது. இந்த  நிலையில் 2000 திரைகளை அடுத்த ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதிகளுடன் செய்ய சர்வதேச அளவில் தரமாக அமைக்க உள்ளது. இது குறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி கருத்து தெரிவித்து உள்ளார்.

தங்கம் விலை குறைவு..! இன்றைய சவரன் விலை இவ்வளவு தான்..!

15 கோடி செல்வதில் தியேட்டர் அமைக்க பட உள்ளது என்றும் கூடுதலாக புட் கோர்ட்  அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 80 சதவீத மக்கள் வெளியிலிருந்தும், 20 சதவீத மக்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.
 
மேலும், விமான நிலையத்தில் திரை அரங்கு வைக்கப்பட்டால் கண்டிப்பாக மக்களுக்கு மிக சிறந்த பொழுதுபோக்காக அமைந்து விடும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.