தேர்வு நடக்கும்... ஆனால் யாரும் பெயில் ஆக்க மாட்டோம்..! அமைச்சர் அதிரடி..! மாணவர்கள்  டபுள் குஷி..!  

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் ஆனால் யாரும் பெயில் ஆக மாட்டார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர்பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவில், ‘’5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, 3 ஆண்டு காலத்தில் மாணவர்கள் தங்களுடைய அறிவு ஆற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளுவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இன்று எந்த நிலை உள்ளதோ இதே நிலை தான் அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு தொடரும்’ என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் ஆனால் யாரும் பெயில் ஆக மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதே வேளையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை செய்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.