தாலி கட்டி 1  மணி நேரம் கூட ஆகல..அதுக்குள்ள புருஷன் பொண்டாட்டிய பிரிச்சிடுச்சு PUB G கேம்..! 

PUB G கேமால் திருமணமான புதுமண தம்பதியரை ஒரு மணி நேரத்திலேயே பிரித்து வைத்த சோக சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது.இந்தியா முழுக்கவே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அவர்களை ஒருவிதமான அடிமைகளாக்கி வருகிறது pubg  என்கிற ஆன்லைன் கேம் இந்த கேமை இரவு முழுக்க ஆங்காங்கு உள்ள தனது நண்பர்களுடனும், முகம் தெரியாத நண்பர்களுடனும், ஆன்லைன் மூலமாக ஒன்றுகூடி விளையாடுகின்றனர்.

இதில் உள்ள அதீத ஆர்வத்தால் அந்த விளையாட்டில் அடிமைகளாக கூட இருக்கின்றனர். இதன் காரணமாக தன்னுடைய வேலைகளை கூட சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாமலும், சரியான தூக்கம் இல்லாமலும், மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களின் இந்த செயலை பார்த்து பெற்றோர்களும் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த கேம் விளையாடி வெற்றி பெற்ற பின் அவர்களுக்கு கொடுக்கப்படும் சிக்கன் என்ற ஒரு இமேஜ். அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு பெருமை பேசுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க pubg விளையாட்டுக்கு அடிமையான சில ஒரு திருமண வீட்டிற்கு சென்ற போது திருமணம் முடிந்து தம்பதிகள் அருகருகே அமர்ந்து உணவு அருந்தும் போது கூட, யாருக்கு சிக்கன் ?என்றபடி pubg கேம் பெயரை சொல்லி உரசி விட்டுள்ளனர்.

அப்போது இலையில் இருந்த சாதத்தை மணப்பெண் தன் பக்கமாக இழுத்து கொண்டுள்ளார். பின்னர் தொடர்ந்து அங்கு கூடி இருந்தவர்கள் கேலியும் கிண்டலுமாக சில வார்த்தைகளை சொல்லி வர கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற மன மாப்பிள்ளையோ, இலையை அப்படியே தூக்கி எறிந்துள்ளார்.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்க  வேண்டிய திருமணத்தில் இப்படி ஒரு சோகம் நடந்துள்ளது. திருமணமான அதே நாளில் அதுவும் ஒரு மணி நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு இருவருக்குள்ளும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் எந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்டலாம். இனியாவது திருந்துவார்களா நம் இளைஞர்கள்?