மதுரையில் மும்முரம் காட்டும் PTR ..! விரைந்து செயல்பட தயார் ...!

ஆழ்கிணற்றில் விழுந்து உயிரிழந்த  சுஜித்தின் மரணம் தமிழகத்திற்கு பெரும் துயரமாக அமைந்து விட்டது என்பதால் எந்த மாற்றமும் கிடையாது.

இந்த ஒரு பேரிழப்பு அனைவர் மத்தியிலும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்டதை அடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக இருந்தது.

அதனை தொடர்ந்து அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து ஒருசில கிணறுகளை மூடி விட்டோம் என போட்டோ பதிவும் பார்க்க முடிந்தது. இந்த ஒரு நிலையில் தன்னார்வலர்களும் அரசியல்வாதிகளும் பொதுநலம் கருதுபவர்களும் தங்கள் ஊரில்  பயனில்லாத ஆழ்துளை கிணறு  இருந்தால் உடனடியாக தெரிவியுங்கள்.. அதனை முறையாக மூடிவிடலாம் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி உட்பட்ட பகுதிகளில் ஏதேனும் ஆழ்துளை போர்வெல் திறந்து பாதுகாப்பற்ற முறையில் இருந்தால் உடனே மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்  திமுக தகவல் தொழிநுட்ப பிரிவு நிர்வாகி டாக்டர் பழனிவேல் தியாகராஜன்

இந்த ஒரு நிலையில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது