மாஸ்க் தைக்கும் "ஜனாதிபதியின் மனைவி" சவீதா கோவிந்த்..! உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரே ஒரு போட்டோ..! 

இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியே கொரோனாவிற்கு எதிரான போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு ஆதாரமாக ஓர் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது 

உலகையே இன்று ஆட்டிப்படைக்கும் கொரோனா, இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதன் தாக்கத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள் பெருமுயற்சி எடுத்து, தற்போது 40 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த தருணத்தில் கொரோனாவின் தாக்கம் சமூதாய தொற்றாக மாறாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒரு நிலையில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மாஸ்க் மற்றும் கையுறை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாலும், அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக நாட்டின் முதல் குடிமகனாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவி சவீதா கோவிந்த் அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள சக்திஹாத் என்ற பகுதியில் ஒரு தையல் மெஷினை வைத்து, மாஸ்க் தைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

இவர் தயாரிக்கும் மாஸ்குகளை, டெல்லியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சவீதா கோவிந்த் அவர்களின் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் நாட்டின் ஜனாதிபதியின் மனைவியே கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இறங்கி மக்களுக்கு இப்படி ஒரு உதவி செய்து வருகிறார் என பெரும் ஆச்சர்யமாகவும், அதே வேளையில் அதிச்சியாகவும் பார்க்கின்றனர். இந்த ஒரு ஒரு புகைப்படம் தற்போது  சமூகலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது