prediction for modi in this Saturn transit indicates his improvement

இன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி ஆகியுள்ளது. விருச்சிக ராசியில் இருந்து சனி பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இதனை பலரும் கோயில்களுக்குச் சென்று சனி பகவானை வணங்கி வழிபட்டு வருகின்றனர். 

நவகிரகங்களில் சனிக்கு தனி மகத்துவம் உண்டு. இரண்டரை வருடம் ஒரு ராசியில் இருந்துவிட்டு அடுத்த ராசிக்கு மாறும் சனி, மெதுவாகச் செல்பவர். அதனால் பலன்கள் ஒரு ராசியில் இருக்கும் போது இரண்டரை வருடங்களுக்கு நீட்டிக்கும். 

பலரும் தங்கள் ராசிக்கு சனிப் பெயர்ச்சி பலன்களைப் பார்த்திருப்பார்கள். ஆனா, இந்த சனிப் பெயர்ச்சியால நம்ம நாட்டுக்கு என்ன விளைவுகள் ஏற்படும், நம்மை ஆள்பவர்களுக்கு என நடக்கும், முக்கிய அரசியல் தலைகளுக்கு என்ன ஆகும் ... இப்படியெல்லாம் பார்ப்பதற்கு ஒரு சிலருக்கே ஆர்வம் இருக்கும். 

அந்த வகையில், இந்த சனிப் பெயர்ச்சியில், நம் நாட்டின் பிரதமர் மோடிக்கு என்ன பலன்கள் இருக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜென்ம சனியாக அமர்ந்து, ஆரோக்கியக் குறைவையும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் சனி பகவான் தந்து கொண்டிருந்தாராம். இப்படியே கஷ்டப் படுத்தி அவரை உருமாற்றியுள்ளார் சனி பகவான். 

இப்போது, அவருக்கு இரண்டாமிடத்துக்குச் செல்கிறார். அதாவது ஜென்மராசியாகிய விருச்சிகத்தில் இருந்து இரண்டாம் இடமான தனுசுக்கு செல்கிறார் சனி பகவான். இதனால், அவருக்கு மிகப் பெரிய நிம்மதி கிடைக்குமாம். முகத்தில் புன்னகை மிளிருமாம். சோர்வு, சலிப்பு நீங்கி, உற்சாகம் தலை தூக்குமாம். வழக்குகள் சாதகமாகி, எதிரிகளை பலவீனம் அடையச் செய்வாராம் சனி பகவான். அரசியல் பயணம் அவருக்கு வெற்றி அடையும் என்றும் மேலை நாடுகள் வாழ்த்தும் என்றும் பலன்களைச் சொல்லியிருக்கிறார்கள். 

இதனைப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், சனி பெயர்ச்சி இவ்வளவு நாள் கெட்ட நேரம்... தலெ, கெட்ட நேரத்துலயே தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பாரு. இப்போ 2 1/2 வருஷத்துக்கு நல்ல நேரம் வேற திரும்புதாம். செத்திங்கடா போராளிகளா!! என்று ஒருவர் கருத்திட்டிருக்கிறார்.