கோவில் நுழைவாயிலில் நடிகை ராஜாவுடன் செல்பி எடுத்த பூசாரி..! அடுத்த வெடித்த பிரச்சனையை பாருங்க..!  

ஆந்திர மாநில எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா காங்கேயத்தில் உள்ள சிவன் மலை கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள அறநிலையத் துறை ஊழியர் ஒருவர் ரோஜாவுடன் ஒரு செல்பி  எடுத்துள்ளார். இது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் இடையே ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் என்ற பகுதியில் உள்ளது தான் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி. இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்வர்.

அந்தவகையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா சிவன்மலை கோவிலுக்கு வந்த போது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தன்னுடைய பணியை மறந்து கொடிமரம் பகுதியில் ராஜகோபுரம் நுழைவாயிலை அடைத்து நின்றபடி நடிகை ரோஜா உடன் அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.