பொள்ளாச்சியில் பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருநாவுக்கரசு தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்த உடன் நாடே கொந்தளித்தது. பல ஆண்டுகளாக இந்த சம்பவம் நடைபெற்று வருவதும், இந்த தகவல் துறைக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவிற்கு லட்ச கணக்கில் காவலர்களுக்கு பணம் பரிமாறி உள்ளதாம்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தைரியமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரே இந்த விஷயம் பூகம்பமாக கிளம்ப தொடங்கியது. இல்லை என்றால், ஏற்கனவே இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் காவலர்களே இந்த சம்பவத்திற்கு காவல் கொடுத்து உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

இந்த விவகாரம் தொடர்பாக திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியில், இந்த வழக்கு சிபிசிஐடி- கு மாற்றப் பட்டது. பின்னர் திருநாவுக்கரசசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 

அதன் படி,இன்றுடன் நன்கு நாட்கள் காவல் முடிவடைவதால், இன்று மாலை கோவை  நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப் படுவார் என தெரிகிறது.

இங்கு கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னே வென்றால், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாருக்கு பிறகு, திருநாவுக்கரசு கூட்டாளிகள் மட்டுமே பிடிபட்டனர். திருநாவுக்கரசு வேறு மாநிலத்திற்கு சென்று தலை மறைவானார். அந்த ஒரு வார காலம் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார்..? இங்கிருந்து தப்பித்து  செல்ல உதவிய அதிகாரிகள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு  உள்ளதாம்.

மேலும், ஒரு வாரம் பிறகு தானே வந்து சின்னப்பம்பாளையத்தில் கைதானார் திருநாவுக்கரசு. அப்படி என்றால் யார் அறிவுறுத்தல் படி அவர் தப்பித்து சென்றார் ..? யார் அறிவுறுத்தல் படி மீண்டும் கைதானார்..? என்ற பாணியில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல காவலர்களுக்கும், ஒரு சில அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாம். இன்னும் என்னென்ன நடந்துள்ளதோ..?