Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சி விவகாரம்: "வெளிவந்த அடுத்த உண்மை"..! சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்...! கேட்டாலே தலை சுற்றும் அடுத்த பரபரப்பு..!

கடந்த ஒரு வார காலமாக பொள்ளாச்சி விவகாரம் சூடுபிடித்து உள்ளது. 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவர்களை மிரட்டி நகை பணம் பறிப்பதோடு வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டல் விடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
 
pollachi issues continues and a shocking news from cbcid
Author
Chennai, First Published Mar 15, 2019, 4:28 PM IST

கடந்த ஒரு வார காலமாக பொள்ளாச்சி விவகாரம் சூடுபிடித்து உள்ளது. 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவர்களை மிரட்டி நகை பணம் பறிப்பதோடு வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டல் விடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் அதிமுக அம்மா பேரவையின் பொள்ளாச்சி வட்ட செயலாளராக இருந்த பார் நாகராஜ் என்பவரையும் கைது செய்து, அதற்கு அடுத்த நாளான நேற்று முன்தினமே பார் நாகராஜை விடுவித்தது போலீஸ்.

pollachi issues continues and a shocking news from cbcid

இதனைத் தொடர்ந்து ஆளும் அரசியல் புள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் வலுத்த நிலையில் இந்த விவகாரம் மீதான விசாரணையை சிபிசிஐடி-கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் 9488442993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரத்தை அளிக்கலாம் என்றும் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் நேற்று மாலை அறிவிப்பு வந்திருந்தது.

pollachi issues continues and a shocking news from cbcid

இதனைத் தொடர்ந்து இந்த எண்ணிற்கு மட்டும் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போன் செய்து பல விவரங்களை குறிப்பிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தவிர்த்து பொதுமக்களும் இந்த எண்ணிற்கு கால் செய்து அவர்களை சும்மா விடக்கூடாது என்றும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pollachi issues continues and a shocking news from cbcid

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தங்களிடம் ௪ வீடியோக்கள் மட்டுமே உள்ளது என கோவை எஸ்.பி பாண்டியராஜன் தெரிவித்து இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் சேர்த்து அனைவரின் முன் அறிவித்திருந்தார். இப்படி எல்லாம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி பொதுவெளியில் எஸ்பி எப்படி கூறலாம்? என்று மாதர் சங்கம் முதல் அனைவரும் பெரும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு மட்டும் 100 கும் மேற்பட்ட போன் கால்கள் வந்துள்ளதால் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. எது உண்மை என்பது விசாரணைக்கு பின்னே தெரியவரும்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios