சிக்கியது 5000 ஆபாச வீடியோக்கள்...! திணறும் IPS அதிகாரி முதல் அரசியல் தலைவர்கள் வரை..!

மத்திய பிரதேச மாநிலத்தில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்து  மிரட்டல் விடுத்த கும்பலை வளைத்து  பிடித்து  உள்ளனர் போலீசார்.

அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், முக்கிய விஐபிக்கள் என பலரையும் குறிவைத்து பாலியல் மோசடிகளில் ஈடுபட்டு உள்ளது ஒரு கும்பல். இது தொடர்பாக 5 பெண்கள் மற்றும் கார் ஓட்டுனர் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து பெண்களும் முக்கிய விஐபி க்களை குறிவைத்து போனில் தொடர்பு கொண்டு பேசுவதும், அவர்களுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் சற்று நெருங்கி பழகிய  பின்னர் வீடியோ பதிவு செய்வது என பல விஷயங்களில் இறங்கியுள்ளனர் இந்த கும்பல். பின்னர் இந்த வீடியோ புகைப்படம் மற்றும் போனில் பேசிய ஆடியோ இவற்றை காண்பித்து பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்து உள்ளனர்.

இதில் சிக்கிய பொறியாளர் ஒருவர் இவர்களின் மிரட்டலுக்கு பயந்து போலீசில் புகார் அளிக்கவே இந்த அனைத்து உண்மையும் கசிந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட 5 பெண்கள் மற்றும் கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாச  வீடியோக்கள், ஆடியோ, ஸ்கிரீன்ஷாட் என அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் லேப்டாப் உள்ளிட்ட அனைத்து மின் சாதனப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்களில் காங்கிரஸ் பாஜக மற்ற கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரை சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக இந்தப் பெண்களில் ஒரு சிலர் தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றதும், இந்த கும்பலிடம் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரே சிக்கிக் கொண்டதும் அவரிடம் சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது வரை கூடுதல் விவரமாக தெரியவந்துள்ளது.

இந்த நான்காயிரம் வீடியோக்கள் தவிர மேலும் பல வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ரெக்கவர் செய்யும் பணியில் போலீசார் முழு வீச்சாக ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய முடியாத நிலையில் ஏற்கனவே பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 

நட்சத்திர ஹோட்டல்கள், கிளப் என விஐபி களுடன் இந்த பெண்கள் எடுத்துக் கொண்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் இது தொடர்பாக நட்சத்திர ஹோட்டலில் மேற்கொண்ட விசாரணையில் சில பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அங்கு வைத்துள்ள சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக அரசு தொடர்புடைய உதவிகள் பெறுவதற்காக இந்த பெண்கள் அவர்களிடம் இருந்து உதவி பெறுவது போல் நடித்து இதுபோன்ற வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்து ஆராயும்போது அரசியல்வாதிகள் மற்றும் அந்த முக்கிய வி ஐபிக்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது 

2018 ன் திருத்தப்பட்ட சட்டத்தின்படி பாலியல் ரீதியாக ஆதாயம் பெறுவது ஊழல் தடுப்பு சட்டத்தில் இடம் பெறுகிறது. எனவே குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகாலம்  சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.