காவல் உடையிலேயே உருகி உருகி பாட்டு பாடும் "போலீஸ்"..! கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதே நோக்கம்!

நாடே கொரோனா பிரச்னையில் இருந்து எப்போது தான் மீளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் கிளம்பி  உள்ளது. இந்த ஒரு நிலையில் தான் கோரோனோ நீங்க வேண்டும் என்று கோயிலில் அமர்ந்து சீருடையில் எஸ்.ஐ.பாடும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் வெங்கடாசலம். இவர் பிறவி முதலே கடவுள் பக்தி மிகுந்தவர். இவர் பணி சுமை தெரியாமல் இருக்க பணி ஓய்வு நேரத்தில் இறைவம் பாட்டு பாடுவது வழக்கமாக வைத்து இருந்தார். 

இந்நிலையில் கொரோனா தொற்று நோய் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்து தானே சுயமாக ஒரு பாட்டு எழுதி, பண்ணந்தூர் உள்ள சிவன் கோயிலில் காவலர் சீருடையிலேயே அமர்ந்து பாடியுள்ளார். இந்த பாட்டில் நாட்டில் இருந்து கோரோனா விலகி மக்கள் தீட்சம் அடைய வேண்டும் என்று இறைவனிடம் உருகி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"

மேலும், மக்களை காப்பாற்ற மருத்துவர்கள்,செவிலியர்கள்,காவலர்கள்,தன்னார்வலர்கள்,தூய்மை பணியாளர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி சேவை செய்து மக்களை பாதுகாத்து வருகிறார்கள்.தற்போது இதனையும் மீறி, காவலர் ஒருவர் கடவுளிடம் கொரோனாவில் இருந்து மக்கள் மீள வழிபிறக்க வேண்டும் என உருகி உருகி பாடி இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.