மக்களிடம்... ஒரு போலீஸ் இதைவிட வேற எப்படியும் கெஞ்ச முடியாது..! 

21 நாட்களுக்கு சமூக விலகல் கடைபிடித்து வரும் தருணத்தில் பெரும்பாலோனோர் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும், பலரும் அடங்காமல் வெளியில் சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது . 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒரு சிலர் வெளியில் தேவை இல்லாமல் சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது.

அதே வேளையில் அரசும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர அனுமதி கொடுத்து உள்ளது. ஆனால் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் சாதாரணமாக வெளியில் வருவதை பார்க்க முடிந்ததை அடுத்து  தற்போது கண்டிஷன் அதிகமாகி விட்டது. அதன் படி, இனி தேவை இல்லாமல் வெளியில் யாரவது நடமாடுவதை பார்க்க முடிந்தால் கண்டிப்பாக வர்களுக்கு போலீஸ்  ஆதி கொடுத்து வீட்டிற்கு திருப்பி  அனுப்புவார்கள். 

மற்றொரு பக்கம், அவர்கள் மீது வழக்கு பதிவது மட்டுமல்லாமல், வாகனத்தின் சாவியையும் வாகனத்தையும்  பறிமுதல் செய்கின்றனர். 

இதை எல்லாம் அறிந்தும் கூட சிலர் வெளியில் வாகனத்தை ஓட்டி வானத்தை பார்த்த சென்னை  அண்ணாசாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிஷித் மசாலைகளில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி கை  எடுத்து கும்பிட்டு, தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க என கூறியது பார்ப்போரை கலஙக வைத்து உள்ளது. இதை பார்த்தாவது மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது