சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் ஒரு மசாஜ் சென்டருக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பணம், நகையை பறித்து சென்றது.

இந்த நிழழ்வு கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடந்தது. திடீரென மசாஜ் சென்டருக்குள் நுழைந்த இந்த கும்பல் ஊழியர்களை மிரட்டி தாக்கியதோடு அவர்களிடமிருந்த 36 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 4 சவரன் நகையையும் பறித்து சென்றது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்அடிப்படையில், குற்றவாளிகளை தேடி வந்தனர் போலீசார். இந்த நிலையில் இன்று செனாய் நகரில் அந்த கும்பல் பிடிபட்டது. அவர்களிடமிருந்த கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இவர்களிடம் பல  திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிடிபட்டவர்கள் அனைவரும் பெண்களை வைத்து தவறான தொழில் செய்வதுடன், பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்

இன்பயா பாண்டியன் என்ற நபர் தான் இந்த கும்பலுக்கு தலைவனாம். பிடிபட்ட கும்பல் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளைக்கூட்ட தலைவனையும் தேடி வருகிறது போலீஸ்.