பிரதமர் மோடியின் இன்றைய  "ட்வீட்"..!   "எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்"...!  

கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் தொடர்ந்து எதிர்த்து பரப்புரை மேற்கொண்டு வரும் மம்தா பானர்ஜி ஒருபக்கம் இருக்க... இன்னொரு பக்கம் கொல்கத்தாவில் 2 நாள் தங்கி  மிகவும் பாரம்பரியமிக்க கட்டடங்களை புதுப்பிக்கும் வண்ணம் கரன்சி கட்டடம்,மெட்காபே ஹவுஸ் பெல்வடேரே ஹவுஸ், விக்டோரியா மெமரியோல் ஹால் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்க திட்டமிடப்பட்டு  உள்ளது 

மேலும் கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழா நடக்க உள்ளதால் இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மம்தா பானர்ஜி இருவரும் ஒரே மேடையில் சந்திக்க உள்ளனர். மேலும் பிரதமரின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்த பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக வெஸ்ட் பெங்கால் செல்ல இருப்பது எனக்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. மேலும் ராமகிருஷ்ணா மிஷனில் நேரத்தை செலவழிக்க இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க இருக்கிறேன். மிகச் சிறப்பு வாய்ந்த இடம் அது" என தெரிவித்துள்ளார்.

 

மம்தா பேனர்ஜீ, பிரதமருக்கு ராஜ்பவனில் தங்க அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் இருவரும் இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரே மேடையில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் காட்டி வரும் மம்தா  அப்போது பிரதமர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருப்பதும், ராஜ் பவனில் தங்க பிரதமருக்கு அழைப்பு விடுத்து உள்ளதும், வெஸ்ட் பெங்கால் செல்ல ஆர்வமாக உள்ளேன் என   பிரதமர் ட்வீட் செய்து இருப்பதும் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி  உள்ளது.