Asianet News TamilAsianet News Tamil

மக்கள் சோர்ந்துவிடக்கூடாது ! கொரோனாவுக்கு எதிரான "நீண்ட போர்"! பிரதமர் நம்பிக்கை உரை..!

இந்திய மக்கள் இந்த அளவுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் சிறு சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டது. 

pm speaks about corona and asked people should not upset at any cause
Author
Chennai, First Published Apr 6, 2020, 3:34 PM IST

மக்கள் சோர்ந்துவிடக்கூடாது ! கொரோனாவுக்கு எதிரான "நீண்ட போர்"! பிரதமர் நம்பிக்கை உரை..! 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் இரவு 9 மணிக்கு சரியாக 9 நிமிடம் விளக்கு ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தியது இந்தியா.

இந்த ஒரு இந்நிலையில் பாஜகவின் நாற்பதாவது தொடக்க தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியா சர்வதேச நாடுகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் நடவடிக்கை மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக எளிதாக இருக்கின்றது. மேலும் மாநில அரசுகளும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒற்றுமையாக இருந்து ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

pm speaks about corona and asked people should not upset at any cause

இந்திய மக்கள் இந்த அளவுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் சிறு சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டது. கொரோனோவுக்கு எதிராக நீண்ட போர் நடக்கிறது. மக்கள் யாரும் இதில் சோர்ந்து  போகக்கூடாது என தெரிவித்து உள்ளார் பிரதமர்.

இந்த ஒரு நிலையில் தான், வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு கூடும் என்றும் மே 9 ஆம் தேதிக்கு பிறகு  மெல்ல மெல்ல குறைய தொடங்கும் எனவும் ஆராய்ச்சி குழு தெரிவித்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் தான்  நாட்டு மக்களிடம் பேசிய மோடி மக்கள் கொரோனாவிற்கு எதிராக நீண்ட போர் நிகழ்த்த வேண்டியிருக்கும். ஆனால் மக்கள் சோர்ந்து  விட கூடாது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   

Follow Us:
Download App:
  • android
  • ios