அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்த மோடி..! என்னதான் இருந்தாலும் அவர் வேலையில் செம்ம மாஸ் தான்..! 

நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு.

கடந்த எட்டாம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 11 ஆம் தேதியான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 

தொடக்கம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த ஆம்ஆத்மி கடைசியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மீதமுள்ள 8 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாகப் பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.