கோரிக்கை வைத்து பிரதமர் மோடி அதிரடி ட்வீட்..! உங்களிடம் இருந்தால் உடனே அனுப்புங்கள்..! 

இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 69-ஆவது பிறந்தநாள் என்பதால் நாட்டு மக்கள் மட்டுமின்றி  உலக அளவில் பெரும் தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் காரணமாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் முதல் ஏழு இடங்களில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதமர் மோடி உடனான நட்பில் இருந்து வரும் பல்வேறு நபர்கள் அவருடைய இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படமும், கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படமும், மேடை பேச்சின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. கட்சி தொண்டர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பேசுவது போல் உள்ள புகைப்படம்  முதல் இன்று பிரதமராக இருப்பது வரை எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து உள்ளார் பிரதமர் மோடி. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்வில் மறக்க முடியாத சில இனிமையான சம்பவங்களை நினைவு கூறுகிறேன்... என்னுடைய பழைய போட்டோக்களை என்னுடைய நண்பர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டு உள்ளார்கள்... அதில் ஒரு சில புகைப்படத்தை இங்கு நான் பதிவிடுகிறேன் மற்றும் இது போன்ற சில அரிய புகைப்படங்கள் யாராவது வைத்து இருந்தால் தயவு கூர்ந்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என தெரிவித்து தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி