ஸ்டெப் எடுக்கும் பிரதமர்..! கரோனோ வைரஸ் எதிரொலி - அவரச ஆலோசனை..! 

சீனாவில் தற்போது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கரோனா வைரஸ் பாதிப்பை இந்தியா எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை செய்யப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா உடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில், லாளர் சுகாதாரத்துறை செயலாளர் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் அமைச்சரவை செயலாகரோனா வைரஸ் நோய் தடுக்க எப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பேசப்பட்டு உள்ளது. இந்த முக்கிய ஆலோசனையில் உள்துறை செயலாளர், வெளியுறவு செயளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதன்படி கரோனா வைரஸ் தாக்கப்பட்டு இருக்குமா என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகை புரியும் நபர்களை விமான நிலையத்தில் சோதனை செய்வது குறித்தும் பேசப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை 7 விமான நிலையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த வைரஸ் குறித்த ஆய்வு செய்ய வைராலஜி துறையும் தயாராக உள்ளது. மேலும் அந்தந்த மாநில மாவட்ட சுகாதாரத்துறை இது குறித்து தீவிரமான நடவடிக்கையில் இறங்க ஆலோசனை செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.