பிரதமர் மோடி... எதிலுமே ஒரு படி மேலே தான்..! மே 3 வரை ஊரடங்கு உத்தரவு- ஓர் சுவாரஸ்ய தகவல்..!

இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது குறித்து  இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
 
இதில் ஒரு சில விஷயத்தை உற்று நோக்கினால், பாஜக ஆளாத மாநில அரசுகளின் அரசியல் சூட்சமும் தெரியவரும். அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா 11 ஆம் தேதியே அறிவித்து இருந்தார். அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் என பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊரடங்கு நீட்டிப்பு  உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.


அதன் பிறகு தான் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊரடங்கு நீடித்து அறிவிப்பு வெளியிட்டார். அதாவது, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை செய்த பின்னரே தமிழகத்தில் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் தான் திமுக தலைவர் முக ஸ்டாலின், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதில் முதல்வர் தயக்கம் காண்பிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் போது ஏன் முன்பாகவே அறிவிப்பு வெளியிடனும் என்ற போக்கில், ஒரு நாள் முன்னதாக எடப்பாடி நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்


இந்த நிலையில் தான், 14 ஆம் தேதியான இன்று பிரதமர் காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். அதில் மே 3 ஆம் தேதி வரை (19 நாட்கள் ) ஊரடங்கு நீளும் என தெரிவித்து இருந்ததை மற்ற மாநிலங்கள் எதிர்பார்க்கவில்லையாம். அதாவது மற்ற மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு படி மேலே சென்று மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீளும் என புரதமர் அறிவித்திருந்தார். ஆக மற்ற மாநிலங்கள் அறிவித்தது போல, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இல்லாமல், 3 நாட்கள் அதிகரித்து மோடிஅறிவித்து உள்ளார்.


கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், கொரோனா விஷயத்தில் பிரதமர் மோடி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களுக்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. மக்களும் பிரதமர் என்ன உரை நிகழ்த்துகிறார் என்பதை மிகவும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர். அவருடைய பேச்சுக்கும் கொரோனா எதிரான  நடவடிக்கைக்கும் முழு ஆதரவு தெரிவிக்கின்றனர்.