ரசிகருக்கு புத்தாண்டு பரிசு கொடுத்த பிரதமர் மோடி..! அந்த அதிசய கி ஃப்ட் என்ன தெரியுமா..? 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் பக்கத்தில் 52 மில்லியனுக்கும் அதிகமான  ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி உலகில் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் மிக முக்கிய  நபர்கள் என மொத்தம் 2381 பேரை பிரதமர் பின் தொடர்கிறார்.

இந்த நிலையில் தற்போது புத்தாண்டு பிறந்ததால் அங்கித் தூபே என்பவர் பிரதமர் மோடிக்கு செய்துள்ள டவிட்டில், பெரும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே... நான் உங்களின் தீவிர ரசிகன்ல்; புத்தாண்டு பரிசாக நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் என் ட்விட்டர் கணக்கை பின் தொடர வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.'

இதற்கு பதிலளிக்கும் வகையிலும், புத்தாண்டு பரிசாக அந்த நபரை மகிழ்விக்கும் பொருட்டு. "செய்துவிட்டேன்.... நான் உங்களை பின் தொடர்கிறேன்..இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என தெரிவித்து, பிரதமரும் டுவிட் செய்து உள்ளார்.

 

மோடியின் இந்த பரிசு குறித்து மகிழ்ச்சி அடைந்த அங்கித் தூபே,  "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் மோடி ட்விட்டரில் என்னைப் பின் தொடர்ந்தது  இந்தப் புத்தாண்டின் மிக சிறந்த பரிசு எனக்கு" என தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.