எடை கற்களை பயன்படுத்த வருகிறது அதிரடி தடை..!
அரிசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் எடையை அறிய கடைக்காரர்கள் பயன்படுத்தி வரும் கற்களின் பயன்பாடு மிக விரைவில் தடை செய்யப்பட உள்ளது.
எடை கற்கள் பயன்படுத்த வருகிறது அதிரடி தடை..!
அரிசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் எடையை அறிய கடைக்காரர்கள் பயன்படுத்தி வரும் கற்களின் பயன்பாடு மிக விரைவில் தடை செய்யப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் கொள்கை அமைப்பு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக 50 கிராம், 100 கிராம், 200 கிராம், 500 கிராம், ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ எடை கொண்ட கற்களை பயன்படுத்தி தான் உணவுப் பொருட்களை எடை போட்டு மக்களுக்கு வழங்கி வரும் பழக்கம் தற்போது வரை உள்ளது.
இந்நிலையில் இதற்கு தடை விதித்து அதற்கு பதிலாக மிக மிக துல்லியமாக அளவிட கூடிய மின்காந்த அளவீட்டு கருவிகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்தந்த நாடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் திட திரவப் பொருட்களை அளவிடுவதற்கும் மற்ற அதிநவீன மெஷின்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், உடல் வெப்பநிலையை அளக்கும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் அதிநவீன மெஷின்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.