நினைவிருக்கிறதா ஆணவ கொலை..?  திருமணநாளன்றே பிறந்தஆண் குழந்தை...!  

சென்ற ஆண்டு தெலுங்கானாவில் ஆணவ கொலை செய்யப்பட்ட பினராயிக்கு, அவரது திருமண நாளான கடந்த 24ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ் இவருக்கு ஒரே ஒரு மகள் அமிர்தா என்கிற அமிர்தவர்ஷினி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்துவரும் இவர் அவருடன் பணிபுரிந்த பினராயி  என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமிர்தவர்ஷினியின் தந்தை கூலிப்படையை ஏவி பினராயியை கொலை செய்துவிட்டார்.

பினராயி மற்றும் அமிர்தவர்ஷினி இருவரும் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியபோது செப்டம்பர் 13-ஆம் தேதி பினராயி நடுரோட்டிலேயே கொல்லப்பட்டார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது தான், இந்த காதல் திருமணம் பிடிக்காமல் பினராயியை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மாருதி ராவ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மற்ற ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்காக மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் பேசப்பட்டதாகவும், இதற்கு முன் பணமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் அவரை வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இந்நிலையில் தனது கணவரான பினராயி வீட்டில் அவருடைய அத்தை மாமா உடன் வசித்து வந்த அமிர்தாவுக்கு கடந்த 24ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்த, ஜனவரி 24 ஆம் தேதி தான் இவர்களின் திருமண  நாள் என்பது  குறிப்பிடத்தக்கது. தனது திருமண நாளிலேயே குழந்தை பிறந்ததை நினைத்து ஆனந்த கண்ணீரில் உள்ள அமிர்தவர்ஷினி மற்றும் பெண்ணின் பெற்றோர்கள்,மேலும் மாருதிராவ் மூலம் வேறு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என பயந்து, எந்த மருத்துவமனையில் குழந்தை பிறந்தது என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளனர் அமிர்தவர்ஷினி தரப்பினர்.