ஒரு சிலருக்கு முகப்பரு வந்தால் மிக அழகாக இருக்கும். அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் சரி. ஒரு சிலர் முகப்பரு வந்தால் மனதளவில் ஏதோ நோய்வாய் பட்ட மாதிரி மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவார்கள். 

இதற்கெல்லாம், கவலை பட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சில முக்கிய டிப்ஸ் செய்து வந்தாலே போதும். முகப்பரும் காணாமல் போகும். 
 

தேவையானவை:

ஆப்பிள் சிடர் வினிகர் கொஞ்சம் எடுத்துக்கோங்க. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்துக்கொண்டு, ஒரு காட்டன் கொண்டு எங்கு பரு உள்ளதோ..? அந்த பருவின் மீது கலந்து வைத்த வினிகரை கொஞ்சம் அப்ளை செய்யுங்கள். இதை அப்படியே பத்து நிமிடங்கள் விட்டு விடுங்கள் போதும். பின்னர் நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். மறுநாள் காலையில் இந்த பருவின் அளவு அப்படியே குறைந்து, இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

முகப்பரு எதனால் வருகிறது?
 
தலையில் பொடுகு இருந்தாலோ, அல்லது சரும பிரச்சனை, சரியாக தூக்கம் இல்லாமல் போவது இது போன்ற காரணத்தால் முகப்பரு அதிகமா இருக்கும். சரி பிம்பிள்ஸ் வராமல் தடுக்க சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.
 
பரு இருந்தால் scrub யூஸ் செய்ய கூடாது. ஸ்வீட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள். 

மேக் அப் போட்டுக்கொண்டு இரவில் உறங்குவதை தவிருங்கள்..

அதிக படியான எண்ணெய் பொருட்களை எடுத்துக்கொள்ள கூடாது.
 
அதிகமான தண்ணீர் குடிங்க. இவை அனைத்தயும் செய்து வந்தால் போதும், முகப்பரு வருவது நின்று விடும். 

மேற்குறிப்பிட்ட சில விஷயங்களை செய்து வந்தாலே போதும். முகப்பரு வருவதை தடுக்க முடியும் முகப்பரு வந்தால் ஒரு சிலருக்கு வலி கூட இருக்கும். அதே முகப்பரு சற்று பெரிதாக காணப்பட்டால் முக அழகை கெடுக்கும். எனவே செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். முகப்பரு  வரும் போதே , இந்த டிப்ஸ் பயன்படுத்தி பெரிதளவில் வராமல் தடுக்க முடியும்.