பெண்களின் அந்த மூன்று நாட்கள் மிகவும் முக்கியமானவை சிலரைத் தவிர பெரும்பாலான ஆண்கள் அதன் வலியையும் அவதியையும் அறிவதே இல்லை மனைவி எத்தகைய நிலையை கடந்து வருகிறாள் என்று புரிந்துக் கொள்ளாமலும், புரிந்தாலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரியாமலும் உள்ளனர்.

பீரியட்ஸ்ல இருக்கியா?" என்று கேட்பது பெரிய தவறு. பிறந்தநாள் மறந்தால் கூட பரவாயில்லை, தனக்கு எப்போது பீரியட்ஸ் வரும் என்பதை கூடவா அறிந்துக் கொள்ள முடியாது என்ற நிலை அழுத்தம் மிகுந்த அந்த நாட்களில் கோபத்தை உண்டாக்கும். மாதம் முழுதும் எந்த திட்டமிடலும் இன்றி மனைவிக்கு பீரியட்ஸ் நேரத்தில் வெளியே போக திட்டமிடுவது மனைவிக்கு எத்தகைய கோபத்தை உண்டாகும் என்பதை பல கணவர்கள் புரிந்துகொள்வது இல்லை பிறநேரங்களில் மனைவி கோபப்பட்டாலும் சாதாரணமாக இருக்கும் ஆண்கள் பலர் பீரியட்ஸ் நேர அழுத்தத்தில் வரும் கோபத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். ஆண்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாட்களே பெண்களின் பீரியட் நேரம்தான்.

பீரியட் நாட்களில் ஏன்? எதற்கு என்றே புரியாமல் பெண்களுக்கு மூட் மூவிங் வகை கோபம் ஏற்படும்.  இதை புரிந்துக் கொண்டு ஆண்கள் விட்டுக்கொடுக்க பழக வேண்டும்.மற்ற நாட்களில் மனைவியின் அழகு, உடல் நலம் குறித்து குறைகூறும் பல ஆண்கள், பீரியட்ஸ் நாட்களில் விவரமே புரியாமல் நன்றாகத் தானே இருக்கிறாய் என விசாரிப்பது பெண்களுக்கு குறையாக இருக்கிறது. அதற்குப் பதில் ஏதாவது உதவி செய்யட்டுமா என விசாரிக்கலாம்.  பார்க்க புத்துணர்ச்சியுடன் இருந்தாலும், முதல் 2 நாட்களில் பெண்கள் மிகுந்த வலியுடன் தான் இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பீரியட் நாட்களில் வீடு ஏன் சுத்தமாக இல்லை, அடுத்த வேளை உணவு என்ன என்பது போன்ற கேள்விகள் ஏற்புடையதல்ல. தேவையானால் சமைத்தோ ஹோட்டலில் வாங்கியோ கொடுக்கலாம்.மிகுந்த இடுப்பு வலி ஏற்படும் போது பெண்களால் எழுந்திருப்பது சிரமம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். சில வீடுகளில் பீரியட்ஸ் நாட்களில் பெண்கள் பயன்படுத்த தனி பாய், போர்வை, தலையணைகள் இருக்கும்.

இதை சில பெண்கள் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், வேறு சிலருக்கு தாங்கள் ஒதுக்கப்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். பீரியட்ஸ் வலியை விட அந்த நேரத்தில் கணவன் தாம்பத்தியத்துக்கு அழைப்பதால் ஏற்படும் வலி மிகவும் கொடியது. பீரியட்ஸ் நாட்களில் மட்டுமன்றி துணையின் விருப்பமின்றியும், அவரது உடல் மற்றும் மன நிலைக்கு மாறாகவும் கலவியில் ஈடுபடுவது உடல் மற்றும் மன அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.