Asianet News TamilAsianet News Tamil

கிஸ்மிஸ் பழத்தை இவர்கள் தொட்டுக்கூட பார்க்க கூடாதாம்! ஏன் தெரியுமா?

Dry Grapes Side Effects : கிஸ்மிஸ் பழம் சாப்பிடுவது சிலருக்கு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, எந்தெந்த நபர்கள் கிஸ்மிஸ் பழத்தை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

people with these problems should not eat dry grapes or kismis in tamil mks
Author
First Published Aug 3, 2024, 12:52 PM IST | Last Updated Aug 3, 2024, 12:52 PM IST

கிஸ்மிஸ் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் உலர் பழங்களில் ஒன்றாகும். இது பல வகையான ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. இதனால் அவை நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை. குறிப்பாக, ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கிஸ்மிஸ் பழமானது, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். தினமும் காலையில் ஊறவைத்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால், சிலருக்கு திராட்சை நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கிஸ்மிஸ் பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

1. சர்க்கரை நோயாளிகள்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சையை சாப்பிடுவது குறைக்க வேண்டும். அவை கிளைசெமிக் குறியீட்டில் அதிகம்.

2. செரிமான பிரச்சினை உள்ளவர்கள்: திராட்சை செரிமானத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகளை இன்னும் அதிகம் ஏற்படுத்தும்.

3. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள்: திராட்சையில் ஆக்சலேட் என்னும் ஒரு கலவை உள்ளது. இது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். எனவே, சிறுநீரக தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் அதிகப்படியான நுகர்வு சிறுநீரக கல் பிரச்சனையை மேலும் ஏற்படுத்தும்.

4. இரைப்பை குடல் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் : திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இரைப்பை குடல் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், திராட்சை சாப்பிட்டால் அவற்றின் பிரச்சனைகள் அதிகரிக்க கூடும்.

5. ஒவ்வாமை இருப்பவர்கள்: திராட்சை ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை சாப்பிடக்கூடாது. ஏனெனில் திராட்சையில் சல்ஃபைட் உள்ளது. இது உலர்ந்த பழங்களில் காணப்படும் பொதுவானது ஒன்தாகும். இதை அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பிரச்சனைகளை மேலும் உண்டாக்கும்.

இவற்றை நினைவில் கொள்:

  • திராட்சையை சாப்பிடும் முன் அவற்றை பல மணி நேரம் ஊறவைத்து பிறகு சாப்பிட வேண்டும்.
  • அதுபோல திராட்சையை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது ஏனெனில் இதை அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
  • மேலும் திராட்சையை மாலை நேர சிற்றுண்டியாகவோ (அ) எந்த உணவில் கூட சேர்த்தும் சாப்பிடலாம். இதன் மூலம் திராட்சையின் பலன்கள் அதிகம் கிடைக்குமாம்.
  • பெரியவர்கள் ஒரு நாளைக்கு 1/2 கப், அதாவது 50 முதல் 60 கிராம் வரை திராட்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios