4 நாட்களுக்கு நோ டிராபிக்..! பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதால் சென்னையே காலி..!  

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆர்வமாக செல்கின்றனர்.

இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இது குறித்த விவரத்தை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாளை இன்று போகி பண்டிகை, நாளை தைப்பொங்கல், ஜனவரி 16ஆம் தேதியன்று மாட்டுப்பொங்கல் ஜனவரி 17-ஆம் தேதி உழவர் திருநாள் என நான்கு நாட்கள் தொடர்ந்து பண்டிகை வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் தங்கியுள்ள மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆர்வமாக செல்கின்றனர். இந்த நிலையில் ஒருசில தனியார் நிறுவனங்களில் ஒருநாள் மற்றும் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை அளித்துள்ளதால் தொடர் விடுமுறை எடுத்துக் கொண்டு அவரவர் ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சென்னை சற்று வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை என்றாலே தமிழ் மக்கள் மட்டுமின்றி வேற்று மொழி பேசும் மக்கள் வரை அனைவரும் தங்கி வேலை செய்ய கூடிய ஒரு இடமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பண்டிகை காலம் என்றால் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவது வழக்கம். இப்படி ஒரு தருணத்தில் சென்னை வாசிகளுக்கு இந்த 4 விடுமுறை நாட்கள் ட்ராபிக் இல்லாத சென்னையா இருக்கும்.