ஊரடங்கு சொன்னாங்க ..! சொந்த ஊருல போயி அடங்க சொல்லல..! ஏன் மக்களே இப்படி பண்றீங்க..! 

தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சொந்த ஊருக்கு செல்லுங்கள் என தெரிவித்ததா என்ன? தேவையில்லாமல் தவறுதலாக புரிந்து கொண்டு, விளையாட்டாக ஊருக்கு செல்வது நாம் செய்யும் பெரும் தவறு. 

31 ஆம் தேதி என்பது சரியாக ஒரு வார காலம் மட்டுமே... இந்த காலகட்டத்தில் அவரவர் தனிமையில் இருந்தாலே மிகப்பெரிய நன்மை பயக்கும். இதை புரிந்து கொள்ளாமல் ஒரு வார காலத்திற்காக மட்டும் ஊருக்கு செல்வது  என்பது எவ்வெளவு பெரிய முட்டாள்தனம். 

வீட்டை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்பதாற்காகத்தான், அனைத்து சேவையும் முடக்கி, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வராங்க. ஆனால் கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் இப்படி  கூட்டம் கூட்டமாக பேருந்தில் பயணம் செய்ததில் யாருக்கு என்ன தொற்றியதோ...? என கேள்வி எழுந்துள்ளது 

இன்னொரு பக்கம் அனைத்தும் தெரிந்தும் சமூக வலைத்தளங்களில் தூண்டி விடுவது போன்று அரசுக்கு எதிராக பேருந்து சேவை இல்லை  என கருத்துக்களை பதிவிட்டு கேள்வி எழுப்புவது எவ்வளவு பெரிய சுயநலவாதிகள் என்பதை புரிய வைக்கிறது... 

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்போது நமக்கு என்ன தேவை? உண்ண உணவு . இதற்கு பதில் அளித்து விட்டது அரசு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என.. விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் அருகிலுள்ள உணவகம் இயங்கலாம் என்றும் அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது

அம்மா உணவகம் கூட இயங்குகிறது.... பிறகு எதற்கு இந்த ஒரு வார காலம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென முடிவெடுக்க வேண்டும்?